Thursday, April 25, 2019

Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு?

  Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு?
Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு?


சிலர் உபயோகம் இல்லாத Facebook பக்கங்களை Deactivate செய்து வைப்பார்கள். ஆனால் Deactivate செய்த Facebook பக்கம் Register செய்யப்பட்டEmail ID அல்லது Phone Nummber ஐ கொண்டு வேறு Facebook Account திறக்கமுடியாமல் இருக்கும். அதே போன்று Deactivate செய்த Account இல் இருக்கும் Username மீட்டெடுக்கவும்முடியாமல் இருக்கும்.

இதற்காக ஒரு வழி உள்ளது 14 நாட்களில் உங்கள் facebook பக்கத்தைDelete செய்து விடலாம்.

1. உங்கள் கணனியில் Internet Browser இல் ஒரு Tab இல் நீங்கள் Delete செய்ய விரும்ம்பும் Facebook பக்கத்தை Login செய்து கொள்ளுங்கள்.

2. மற்ருமொரு Tab ஐ Open செய்து கீழே உள்ள Link ஐ Open செய்யுங்கள்.

https://www.facebook.com/help/delete_account

3. அதில் Delete செய்வதற்கு Delete என்று காட்டும். அதற்கு Click செய்து உங்கள் Password மற்றும் அதில் தரப்படும் கப்ச Code ஐ சரியாக நிரப்பி உங்கள் Facebook பக்கத்தை Delete செய்து கொள்ளுங்கள்.

14 நாட்களுக்குள் மீண்டும் உங்கள் Account ஐ மீட்டெடுப்பது எவ்வாறு?அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல உங்கள் Facebook Email/Username மற்றும் Password கொடுத்து open செய்யுங்கள் Cancel Deleting நு காட்டும் அதுக்கு Click செய்தால் போதும்.

How to Remove undeletable files in windows using cmd ? உங்களது கணனியில் அழிக்க முடியாமல் எரர் வரும் பைல்-களை அழிப்பது எப்படி?

தற்போதைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக கணனிகளுக்கான வைரஸ் தாக்குதை கூறலாம். இந்த பிரச்சினையில் இருந்து எமது கணணியை பாதுகாத்து கொள்ள நாம் ஏதேனும் சிறந்த ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை பயன்படுத்தி வருகிறோம். என்ன தான் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எமது கணனியில் இருந்தாலும், வைரஸ்-கள் எப்படியாவது கணனியில் வந்து தொற்றிக்கொள்கின்றன.

ஏற்கனவே எமது தளத்தில் நீங்கள் கணனியில் நிறுவி இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக தொழிட்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள ஒரு உபாயத்தை கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.


ஆகவே இவ்வாறான சூழலில் வைரஸ் காரணமாகவோ அல்லது வேறு சில​ காரணங்களால் நமது கணனியில் இருக்கும் சில​ பைல்களை அழிக்க​ முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாறான நேரத்தில் எந்தவிதமான மென்பொருளையும் உபயோகிக்காமல் எமக்கு தேவையான​குறித்த பைல்-ஐ அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இந்த வேலையை செய்து கொள்ள நாம் கணனியில் இருக்கும் CMD-ஐ பயன்படுத்த போகிறோம். ஆகவே கணனியில் இருக்கும் CMD மூலம் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-களை அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் முதலாவதாக உங்களது கணணியை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு குறித்த பைல்-ஐ அழிக்க முயற்சித்து பாருங்கள். அது வெற்றிபெறாவிட்டால் அடுத்த​ படிமுறைக்கு செல்லுங்கள்.
உங்களது கணனியில் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று cmd-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள். அடுத்து "ரன் ஏஸ் எட்மினிஸ்டேடர்" என்பதை தெரிவு செய்து cmd-யை ஆரம்பியுங்கள்.


அடுத்து உங்களது கணனியில் cmd ஆரம்பிக்கப்படும்.


அதிலே DEL /F /Q /A C:\\Users\\உங்கள் யூசர்நேம்\\பைல் இருக்கும் இடம் (லொகேஷன்)\\அழிக்க​ வேண்டிய​ பைலின் பெயர்.
இவ்வாறு டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள். இப்போது குறித்த பைல் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் டிலீட் செய்யப்பட்டு விடும். உதாரணமாக : DEL /F /Q /A C:\\Users\\Tech\\Desktop\\Test.txt

ஆகவே இந்த இலகுவான முறை மூலம் உங்களது கணனியில் குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-ஐ அழித்து விட முடியும்.

Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவது எப்படி…???


Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர்.
அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.

பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

(இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்). மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும்.

அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும்.

இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.